Saturday, June 4, 2022

*நினைவுகளையும் அறியும் தேவன்*

*நினைவுகளையும் அறியும் தேவன்*

*_“நான் அவர்கள் கிரியைகளையும், அவர்கள் நினைவுகளையும் அறிந்திருக்கிறேன். நான் சகல ஜாதியாரையும் பாஷைக்காரரையுங் கூட்டிச்சேர்க்குங்காலம் வரும்; அவர்கள் வந்து என் மகிமையைக் காண்பார்கள்”_* (ஏசாயா 66:18).

*இந்த தேவன் எவ்வளவு உன்னதமானவர், மகிமையுள்ளவர், வல்லமையுள்ளவர், எல்லாவற்றையும் அறிந்த சர்வ ஞானமுள்ளவர் என்பதை நாம் அநேக வேளைகளில் மறந்துவிடுகிறோம். நம்முடைய வாழ்க்கையில் நம் கிரியைகள் தேவனுக்கு முன்பாக அறியப்படாமல் இருக்கின்றதோ என்று எண்ணலாம். இல்லை, தேவனுக்காக நாம் படுகிற பிரயாசமும் அவருக்காக வாழுகிற காரியங்களையும் தேவன் அறிந்திருக்கிறவராய் இருக்கிறார். கர்த்தருக்குள் படுகிற பிரயாசம் விருதாவாய்ப் போகாது என்பதை நாம் அறிந்து கொள்வோம்.* 

*மேலும் தேவன் நம்முடைய நினைவுகளையும் அவர் அறிந்திருக்கிறார். நீதியின் மேல் பசி தாகம் உள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் திருப்தியடைவார்கள் என்று வேதம் சொல்லுகிறது. நம்முடைய நினைவுகளை அவர் கனப்படுத்துகிறார். இந்த தேவன் நம்முடைய வாழ்க்கையின் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார் என்பதை உணர்ந்து அவரை முற்றிலும் சார்ந்துகொள்வது முக்கியம். நம்முடைய நினைவுகள் சரியாய் இருக்கும்பொழுது அவைகளின் மூலமாய் கர்த்தர் மகிமைப்படுவார். ஆகவே நாம் நம்முடைய நினைவுகளையும் காத்துக்கொள்ள அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாக இருக்க வேண்டும். எதிர்மறையான எண்ணங்களை நாம் நீக்குவோம். கர்த்தருக்குள் சரியான நினைவுகளைக் கொண்டவர்களாக நாம் வாழுவதில் ஜாக்கிரதையுள்ளவர்களாக இருப்போம். அநேக வேளைகளில் நம்முடைய நினைவுகள் நம்மை அடிமைப்படுத்தி பயத்துக்குள்ளாக வழிநடத்த வாய்ப்புண்டு.*

*ஆகவே நம்முடைய நினைவுகளைக் கர்த்தருக்குள்ளாகக் காத்துக்கொள்ள அவர் நமக்கு கிருபை செய்வாராக.*

"காலை வணக்கம்"
"இந்த நாள் தங்களுக்கு ஆசீர்வாதமான நாளாக அமைவதாக"